விடிய, விடிய பெய்த மழை: குளிர்ச்சியான சூழலுக்கு மாறிய தருமபுரி

,சாலையில் செல்ல முடியாத அளவுக்கும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.விடிய,விடிய பெய்த வண்ணம் இருந்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
விடிய, விடிய பெய்த மழை: குளிர்ச்சியான சூழலுக்கு மாறிய தருமபுரி
Published on: 

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில், கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்தியது.இதன் காரணமாக வெப்ப சலனம் அதிகரித்தது.

இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்க முடியாத அளவிலும்,சாலையில் செல்ல முடியாத அளவுக்கும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை 6:30 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதை எதிர்பார்க்காத பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், மழையில் நனைந்தபடி சென்றனர்.

மேலும் சிலர், சாலையோரத்தில் உள்ள கடைகளில் தஞ்சமடைந்து மழை நின்றபின் கலைந்து சென்றனர். இந்த மழை சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக தொடர்ந்தது.பின்னர் இரவில் மீண்டும் பெய்ய தொடங்கிய மழை விடிய,விடிய பெய்த வண்ணம் இருந்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

வானிலை ஆய்வு மையத்தினர் கடந்த சில தினங்களாகவே தருமபுரி மாவட்டத்தில் மழை பெய்யும் என்று அறிவித்து வந்தனர். ஆனால் நேற்றுதான் மழை பெய்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com