திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை வருகை தந்தார்.தியாகராஜர் மற்றும் கமலாம்பாள் சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்
Published on

திருவாரூர்:

திருவாரூரில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை வருகை தந்தார்.

முன்னதாக அவர் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, கோவிலில் உள்ள மூலவர் தியாகராஜர் மற்றும் கமலாம்பாள் சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை காண்பித்தனர். பின்னர், அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, அவர் கோவிலை பிரதட்சனம் செய்து அங்குள்ள பிற சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார். அப்போது பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com