கொரோனாவில் இருந்து மீள முடியாததால் பேராசிரியர் தற்கொலை

போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கோவை:

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை  சேர்ந்தவர்  அபுதாகிர் (வயது 26). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ துறை தலைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அபுதாகிருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 

இதனால் அவர் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். அப்போது  அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி சோர்வாக இருந்து வந்து வந்தார். பின்னர் கொரோனா குணமாகி கல்லூரிக்கு சென்றார்.

ஆனால் அவர் தனது உடல்நிலையை நினைத்து மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று   வழக்கம்போல கல்லூரிக்கு சென்றார். அங்கிருந்து   மசூதிக்கு தொழுகை செல்வதாக வீட்டில் கூறினார்.

அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால்  அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கேரள போலீஸ் நிலையத்தில் புகார்  அளித்தனர்.  போலீசார் மாயமான அபுதாகிரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் காரமடை கட்டஞ்சிமலை பகுதியில் மின் கம்பத்தில் தூக்கில் தொங்கியபடி ஆணின் உடல் ஒன்று இருப்பதாக  காரமடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்கிருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். 

விசாரணையில் கேரளாவில் மாயமான பேராசிரியர் அபுதாகிர் கோவை வந்து மின் கம்பத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com