என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
ஏற்காடு மலைப்பகுதியில் தொடர் மழை: வாணியாறு அணையின் நீர்மட்டம் 62 அடியாக உயர்வு
- இன்னும் ஒரு அடி வரை தண்ணீர் நிரம்பினால், அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் ஆற்றில் திறக்கப்படும்.
- தொடர்ந்து ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் 63 அடியை எட்டியதும், உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சேர்வராயன் மலை அடிவாரத்தில் வாணியாறு அணை அமைந்துள்ளது.
இந்த அணையில் தண்ணீர் தேக்கி வைத்து திறப்பதன் மூலம் இடதுபுற கால்வாய் வழியாக வெங்கடசமுதிரம், மெணசி, ஆலபுரம், ஓந்தியம்பட்டி, தென்கரைக்கோட்டை, பூதநத்தம் உள்ளிட்ட ஏரிகளுக்கு, வலதுபுற கால்வாய் வழியாக ஏ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, சாலூர், புதுப்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலம் 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஏற்காடு மலை பகுதியில் தினந்தோறும் கன மழை பெய்து வருவதால், வாணியாறு அணை நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் மழை தொடங்குவதற்கு முன்பு அணையின் நீர்மட்டம் 20 அடிக்கு குறைவாக இருந்து வந்தது. தற்போது ஏற்காடு மலையில் பெய்து வரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 62 அடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் அணையின் மொத்த கொள்ளளவு 64 அடியாகும். இன்னும் ஒரு அடி வரை தண்ணீர் நிரம்பினால், அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் ஆற்றில் திறக்கப்படும். தொடர்ந்து ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் 63 அடியை எட்டியதும், உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனால் வாணியாறு ஆற்றங்கரையோரம் உள்ள வெங்கடசமுத்திரம், மோளையானூர், ஜீவா நகர், மெனசி, பூதநத்தம் அம்மாபாளையம், பறையப்பட்டி உள்ளிட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் எந்த நேரத்திலும், அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் வாணியாற்றில் இறங்கவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவோ வேண்டாம் என பொதுப்பணி துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
எப்பொழுதும் வாணியாறு அணை நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிரம்பும் நிலையில் இந்த ஆண்டு பருவ மழைக்கு முன்பாகவே நிரம்பியதால், பாசன விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்