search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு
    X

    சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு

    • காடையாம்பட்டி, மேட்டூரில் கன மழை அதிக பட்சமாக 36 மி.மீ. பதிவானது.
    • இன்றும் காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக காடையாம்பட்டி, மேட்டூர், சங்கிகிரி மற்றும் ஓமலூரில் நேற்றிரவு கன மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்சன் உள்பட அனைத்து பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக காடையாம் பட்டியில் 36 மி.மீ. மழை பெய்துள்ளது.

    மேட்டூரில் 35.8, ஓமலூர் 31, சங்ககிரியில் 29.2, எடப்பாடியில் 6.2, சேலம் 4.8 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 143 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்றும் காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    Next Story
    ×