சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி

காட்டுக்கொட்டாயை சேர்ந்த நடராஜன் கட்டிட தொழிலாளி.எதிர்பாராத விதமாக நடராஜன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
சங்கராபுரம் அருகே  மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி
Published on

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே நெடுமானூர் கிராமம் காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் நடராஜன் (வயது43) கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ராஜாத்தி (38). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நடராஜன், தனது வீட்டில் பழுதடைந்த மின்விசிறியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக நடராஜன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடராஜனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com