என் மலர்
உள்ளூர் செய்திகள்

செல்வப்பெருந்தகை இன்று மாலை சேலம் வருகை
- மாநில தலைவர்செல்வப்பெருந்தகை , முன்னாள் மத்திய மந்திரி தங்கபாலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.
- நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
சேலம்:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டார். அவர் தற்போது தமிழகம் முழுவதும் மாவட்ட தோறும் சென்று நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக இன்று காலை தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு சேலம் ஒருங்கிணைந்த மாநகர் மாவட்டம், கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இரும்பாலை ரோடு ரெட்டிபட்டி பி.சி.சி திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் மாநில தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி கே.வீ.தங்கபாலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.
மேலும் கட்சி வளர்ச்சி குறித்து கேட்டறிந்து காங்கிரஸ் தலைவர் ஆலோசனை வழங்குகிறார். இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் பாஸ்கர் (மாநகர் ), அர்த்தனாரி (கிழக்கு), ஜெயக்குமார் (மேற்கு) ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். இதில் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.






