நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் பலி

அழகியபாண்டியபுரம்-உக்கிரன்கோட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் கல்லூரி மாணவர் சென்று கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ளது.விபத்து தொடர்பாக லாரி டிரைவரான டவுனை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி  மோதி கல்லூரி மாணவர் பலி
Published on

நெல்லை:

மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சாந்தகுமார்(வயது 18).

இவர் மேலநீலிதநல்லூரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று அழகியபாண்டியபுரம்-உக்கிரன்கோட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் சாந்தகுமார் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சாந்தகுமார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உயிருக்கு போராடிக்கொண்டி ருந்தார். உடனே அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். லாரி டிரைவரான டவுன் வயல்தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம்(55) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com