என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூச்சி மருந்து குடித்த கல்லூரி மாணவர் சாவு
- கல்லூரி தேர்வில் மூன்று பாடங்களில் அரியர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
- மனவிரக்தியில் இருந்த ஜெய்கணேஷ் வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள மூக்கனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயவேல். இவரது மகன் ஜெய்கணேஷ் (வயது16). இவர் கடத்தூரில் உள்ள அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் கல்லூரி தேர்வில் மூன்று பாடங்களில் அரியர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரை வீட்டில் பெற்றோர்கள் கண்டித்து அறிவுரை கூறியுள்ளனர். இதனால் மனவிரக்தியில் இருந்த ஜெய்கணேஷ் வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெய்கணேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இது குறித்து மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






