search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் பகுதியில் வளர்ச்சித்திட்ட பணிகளை  கலெக்டர் ஆய்வு
    X

    மேட்டுப்பாளையம் பகுதியில் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

    • மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தமாக 33 வார்டுகள் உள்ளன.
    • பவானி ஆறு மாசடைந்து வருவதால் தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி நேரில் ஆய்வு செய்தார்.

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தமாக 33 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீரானது பவானி ஆற்றில் இருந்து எடுத்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பவானி ஆறு மாசடைந்து வருவதால் தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இத்திட்டத்திற்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தார். இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அரசின் மூலமாக குழுவினர் திட்ட மதிப்பீடு செய்து அந்த அறிக்கையினை நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு சமர்ப்பித்துள்ளனர்.

    மேலும் இப்பகுதியில் அமைய உள்ள புதிய நீரேற்று நிலையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 3.5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தினை நேற்று கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நகராட்சி ஆணையர் வினோத்திடம் கேட்ட றிந்தார்.

    பின்னர் சத்தியமூர்த்தி நகர் சாலையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் திருப்பூர் மாநகராட்சி குடிநீர் திட்டப்பணி களுக்காக தோண்டப்பட்ட குழிகளால் பழுதடைந்த சாலையினையும் பார்வை யிட்டார். அப்போது மக்களின் குறைகளை கேட்டறிந்து இன்னும் ஒரு வார காலத்திற்குள் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் மணி நகரில் கலைஞர் நகர்புறம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 87 லட்சத்து 39 மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அறிவு சார் மைய கட்டிட கட்டுமான பணிகளையும் ஆய்வுபார்வையிட்டார்.

    ஆய்வின் போது மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் மாலதி, நகர் மன்றத்தலைவர் மெஹரீபா பர்வீன், துணைத்தலைவர் அருள்வடிவு, நகராட்சி ஆணையர் வினோத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×