search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவு முகாம்
    X

    விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் நடைபெறுவதை கலெக்டர் தீபக்ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவு முகாம்

    • பேரூராட்சியில் புதிய நூலக கட்டிடம் கட்டுவது தொடர்பாக இடம் தேர்வு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
    • ஊராட்சி ஒன்றியம் மகளிர்க்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கிடும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் திருச்சினம்பூண்டி ஊராட்சியில் உள்ள செந்தமிழ் நகரில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும், பூதலூர் வட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் புதிய நூலக கட்டிடம் கட்டுவது தொடர்பாக இடம் தேர்வு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    புது ஊராட்சி ஒன்றியம் சிவசாமிபுரம் ஊராட்சியில் அரசு கல்லூரி கட்டுவது தொடர்பாக இடம் தேர்வு குறித்தும், பூதலூர் ஊராட்சி ஒன்றியம் கூடநாணல் ஊராட்சியில் மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருவதை குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

    திருவையாறு ஊராட்சி ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல், பூதலூர் வட்டாட்சி யர்பெர்சி யா, பேரூராட்சி செயல் அலுவலர்நெ டுஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ராஜா, பொற்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×