மேட்டுப்பாளையம் அருகே 2 பெண்களை மணந்த தொழிலாளி தற்கொலை

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கோவை:

மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை ஆலாங்கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுமதி (32). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2 வருடத்துக்கு முன்பு சரவணன், கண்ணகி என்ற ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

2 மனைவிகளும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சரவணனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் சரவணனுக்கும், 2 மனைவிகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் சரவணன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.

அப்போது அவரது மனைவிகள் அவரை கண்டித்து வெளியே சென்றனர். இதனால் மனவேதனை அடைந்த சரவணன் விரக்தியடைந்து வீட்டில் தூக்குப் போட்டுக் தற்கொலை செய்து கொண்டார்.  சிறிது நேரம் கழித்து அவர்கள் வீட்டில் வந்து பார்த்த போது சரவணன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com