கலெக்டர் அலுவலகத்தில் நாளை விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சங்கம் கடந்த ஜனவரி மாதம் 3&ந்தேதி முதல் 48 நாட்களாக கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கோவை:

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சங்கம் கடந்த ஜனவரி மாதம் 3-ந்தேதி முதல் 48 நாட்களாக கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதில் உண்ணாவிரத போராட்டம், கடையடைப்பு, கருப்புக்கொடி ஆர்ப்பாட் டம் உள்ளிட்ட பல்வேறு போராட் டங்களை நடத்திய பின்பும் விசைத்தறியாளர்களுக்கு கூலி ஒப்பந்த பிரச்னை அமல்படுத்தப்படவில்லை.

இறுதிகட்டமாக நாளை (28-ந்தேதி) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை, திருப்பூர் மாவட்ட கலெக் டர்களின் முன்னி லையில் விசைத்தறியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இதில் முடிவு எட்டப்படவில்லை என்றால் மார்ச் 1&ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல்  சோமனூர் மற்றும் 108 கிளை சங்கங்களிலும் கஞ்சித்தொட்டி திறக்கப்படும் என்று விசைத்தறியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த 2014&ம் ஆண்டில் இருந்து விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பிரச்சினை நடைபெற்று வருகிறது. இந்த 8 ஆண்டுகளில் விசைத்தறியாளர்கள் பல்வேறு விலை உயர்வினால் விசைத்தறியாளர்கள் தொழில் நடத்த முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

விசைத்தறியாளர்களுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு வழங்க தொடர்ந்து மறுத்து வருகின்றனர். விசைத்தறி துணி விற்பனையில் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து மந்த நிலை நிலவுவதால் பஞ்சு விலை ஏற்றம், துணி விலை குறைவு காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிகப்படியான நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் அவர்கள் வழங்கி வந்த கூலியை உயர்த்தி வழங்க மறுத்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 28-ந்தேதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு சோமனூர் ரகத்திற்கு 23 சதவீதமும் இதர ரகத்திற்கு 20 சதவீதமும் கூலி உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

ஆனால் இதை ஜவுளி உற்பத்தியாளர்கள் நடைமுறைப்படுத்தாமல் உள்ளனர், இந்த கூலி உயர்வை விசைத்தறியாளர்கள் ஒப்பந்த வடிவில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com