கோவை மத்திய சிறையில் கைதி திடீர் சாவு

கைதான சுப்பிரமணி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.‌
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கோவை:

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் சுப்பிரமணி (37). இவர் ஈமு கோழி பண்ணை நடத்தி வந்தார்.‌ இதில் பொதுமக்களிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக சுப்பிரமணி மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைதான சுப்பிரமணி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.‌ கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து  சிறையில் தண்டனை கைதியாக இருந்து வந்தார்.‌ இந்த நிலையில் அவருக்கு  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.‌ 

இதையடுத்து அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com