

கோவை:
கோவை மாவட்டம் தொண்டமுத்தூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். இவர் கோவிலில் அர்ச்சகராக உள்ளர். இவருடைய மகள் ஐஸ்வர்யா உக்ரைனில் உள்ள கல்லூரியில் 4-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இவர் உக்ரைனில் போரின் காரணமாக நாடு திரும்ப முடியாமல் உள்ளார் .
சரியான உணவு கிடைப்பதில்லை என்றும், குண்டு சத்தம் அருகில் உள்ள கட்டிடங்களில் கேட்டுக்கொண்டே உள்ளது என்றும் கூறியுள்ளார். அங்கு இருப்பதற்கு பயமாக உள்ளதாகவும் ஐஸ்வர்யா கூறியுள்ளார் .
இதையடுத்து பெற்றோர்கள் கலெக்டரிடம் உக்ரைனில் உள்ள மகளை உடனடியாக மீட்டுவரக்கோரி கண்ணீர் மல்க மனு அளித்துள்ளனர்.
இதேபோல கோவை இடிகரை பகுதியில் உள்ள சரத்சந்திரன் என்பவர் உக்ரைனில் 4 -ம் ஆண்டு மருத்துவம் படித்துவருகிறார் .
உக்ரைன் தலைநகர் பகுதியில் உள்ளதாகவும், அங்குள்ள பதுங்கு குழிகளில் உணவு கரன்ட் போன்ற வசதிகள் இன்றி அங்கு உள்ளதாகவும் உடனாடிய தனது மகனை மீட்டுவரக்கோரி அவருடைய அப்பா ராமச்சந்திரன் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.