

கோவை:
பாலக்காடு ரெயில் நிலையம் - பாலக்காடு டவுன் ரெயில் நிலையங்கள் இடையே மின் பராமரிப்பு மற்றும் பழுது நீக்குதல் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் திருச்சி - பாலக்காடு டவுன் இடையே இயக்கப்படும் தினசரி பயணிகள் ரெயில், இன்று முதல் 30-ந் தேதி வரை பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து மட்டும் இயக்கப்படும்.
அதன்படி, தினமும் பாலக்காடு டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு டவுன் - திருச்சி தினசரி ரெயில் (எண் 16844) இன்று முதல் பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் 6.45 மணிக்கு திருச்சி புறப்பட்டு செல்லும்.
அதேபோல, தினமும் இரவு 8.25 மணிக்கு பாலக்காடு டவுன் நிலையத்தை வந்தடையும் திருச்சி - பாலக்காடு டவுன் ரெயில் (எண் 16843) இன்று முதல் 30-ந் தேதி வரை பாலக்காடு ரெயில் நிலையத்துடன் திரும்பும். இந்த தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை - ஹிசாா் வாராந்திர ரெயிலில் 2 குளிா்சாதன வசதி கொண்ட பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்டரெயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஹிசாா்-கோவை வாராந்திர விரைவு ரெயில்வே (எண்: 22475) ஜூன் 1-ந் தேதி முதல் 2 குளிா்சாதன வசதி கொண்ட பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டு இயக்கப்படும்.
அதேபோல கோவை - ஹிசாா் வாராந்திர விரைவு ரெயிலில் (எண்: 22476) ஜூன் 4-ந் தேதி முதல் 2 குளிா்சாதன வசதி கொண்ட பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டு இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.