

பொள்ளாச்சி:
பொள்ளாச்சியை அடுத்த மகாலிங்கபுரம் கிட்டரசம்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 41). பெயிண்டர். இவருக்கு அறிமுகமானவர் டி.கொட்டம்பட்டியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி லோகேஷ் (24) மற்றும் மற்றும் அவரது நண்பர் பிரதீப் (24).
சம்பவத்தன்று லோகேஷ் மற்றும் பிரதீப், ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்கள் ராதாகிருஷ்ணனிடம் தங்களுக்கு பணம் கடன் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.அதற்கு அவர் தன்னிடம் தற்போது பணம் இல்லை. இருக்கும்எபோது தருவதாக கூறியுள்ளார். ஆனால் அவர்கள் உடனே பணம் வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இது தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த லோகேஷ் மற்றும் பிரதீப், ராதாகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினர். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர் .
பலத்த காயம் அடைந்த ராதாகிருஷ்ணன் வலியால் சத்தம் போட்டார். அவரின் சத்தத்ஓதை கேட்டு ஓடி வந்தனர். அவர்கள் ராதாகிருஷ்ணனை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து ராதாகிருஷ்ணன் மகாலிங்கபுரம் போலீசில் புகார் தெரி வித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி லோகேஷ் மற்றும் பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.