சுந்தராபுரத்தில் சிறுவர் பூங்காவில் செயல்படாமல் பூட்டியே கிடக்கும் கழிவறைகள்

கழிவறை செல்ல வேண்டும் என்றால் அருகே உள்ள தக்காளி மார்கெட்டில் செயல்பட்டு வரும் கழிப்பறைக்கு செல்லக் கூடிய நிலை உள்ளது.
கழிவறை
கழிவறை
Published on

குனியமுத்தூர்:

கோவை மாநகராட்சி சுந்தராபுரம் பகுதியில் 97-வது வார்டுக்குட்பட்ட உழவர் சந்தை அருகே கோவை மாநகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது.

இந்த பூங்கா  காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். இந்த பூங்காவிற்கு சுந்தராபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் குழந்தைகளுடன் வருவார்கள்.

இதுதவிர நடைபயிற்சிக்காகவும் பலரும் வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பூங்காவிற்குள் உள்ள கழிப்பறை செயல்படாமல், பூட்டிய நிலையிலேயே காணப்படுகிறது. இதனால் பூங்காவிற்கு வருபவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

அவர்கள் கழிவறை செல்ல வேண்டும் என்றால் அருகே உள்ள தக்காளி மார்கெட்டில் செயல்பட்டு வரும் கழிப்பறைக்கு செல்லக் கூடிய நிலை உள்ளது.

இதுகுறித்து பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் கூறியதாவது:-சுந்தராபுரம் பகுதியில் வசிப்பவர்களுக்கு பொழுது போக்கு என்று எதுவும் கிடையாது. இந்த பூங்கா மட்டுமே பொழுது போக்காக உள்ளது. இதனால் ஏராளமானோர் மாலை நேரங்களில் தங்கள் குழந்தைகளுடன் இந்த பூங்காவிற்கு வருவார்கள். 

அதிகம் பேர் வந்து செல்லும் இந்த பூங்காவில் கழிப்பறை இருந்தும் செயல்படாமல் இருப்பதால் மிகவும் அவதியடைந்து வருகிறோம். எனவே மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு, இங்கு பூட்டி வைத்திருக்கும் கழிப்பறைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com