கோவை வழியாக கன்னியாகுமரி-புனே விரைவு ரெயில்

கோவை வழித்தடத்தில் கன்னியாகுமரி&புனே இடையே விரைவு ரெயில் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

கோவை:

கோவை வழித்தடத்தில் கன்னியாகுமரி&புனே இடையே விரைவு ரெயில் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரியில் இருந்து புனேவுக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பொம்மிடி வழித்தடத்தில் தினசரி விரைவு ரெயில் இயக்கப்படுகிறது. மார்ச் 31&ந் தேதி முதல் தினமும் காலை 8.25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த ரயில் (எண்: 16382) கோவைக்கு இரவு 7.57&க்கு வந்தடையும் 8 மணிக்கு புறப்பட்டு  மறுநாள் இரவு 10.20 மணிக்கு புனே சென்றடையும்.

இதேபோல, ஏப்ரல் 1&ந் தேதி முதல் புனேவில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும் விரைவு ரெயில் (எண்: 16381) புறப்படும் நாளில் இருந்து 3&வது நாள் 12.30 மணிக்கு கன்னியாகுமரியைச் சென்றடையும். இந்த ரெயில் இரவு 11.52 மணிக்கு கோவை வந்து 11.55&க்கு புறபட்டு செல்லும்.

இந்த ரெயில் நாகர்கோவில், குழித்துறை, பாரசாலா, திருவனந்தபுரம், கடகாவூர், கொல்லம், கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவள்ளூர், கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, அங்கமாலி, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருப்பதி, ரேணிகுண்டா, கடப்பா, குண்டக்கல், அடோனி, மந்த்ராலயம் சாலை, ராய்ச்சூர், சோலாபூர், குருடுவாடி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com