கோவையில் 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 1.14 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

தமிழகத்தில் நடப்பாண்டில் 10 மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கோவை,  

தமிழகத்தில் நடப்பாண்டில் 10 மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 25-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை 10 மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது.

இதனை தொடர்ந்து 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பொதுத்தேர்வு நடக்கிறது.  பிளஸ்-1 மாணவர்களுக்கு மே 9-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது. பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை நடக்கிறது.

மேலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள்  ஜூன் 17-ந் தேதியும், பிளஸ்-2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 23-ந் தேதியும், பிளஸ்-1 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 7-ந் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை கோவை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிப்பெ றும், தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 21 ஆயிரத்து 282 மாணவர்கள், 20 ஆயிரத்து 659 மாணவிகள் மொத்தம் 41 ஆயிரத்து 941 பேர் பிளஸ்-1 பொதுத் தேர்வினை 17 ஆயிரத்து 503 மாணவர்கள், 19 ஆயிரத்து 657 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 160 பேர் எழுத உள்ளனர். 

பிளஸ்&2 பொதுத் தேர்வினை 15 ஆயிரத்து 940 மாணவர்கள், 19 ஆயிரத்து 55 மாணவிகள் என மொத்தம் 34 ஆயிரத்து 995 பேர் எழுத உள்ளனர்.  கோவை மாவட்டத்தில் 10, மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வினை மொத்தம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 96 பேர் எழுத உள்ளதாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com