கோவையில் சிறுமியை கற்பழித்த டிரைவர் கைது

துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி டிரைவரை கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கவுண்டம்பாளையம்:

கோவை வடவள்ளி அருகே உள்ள குப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 21). இவர் சோமநாயக்கன் பாளையம் பஞ்சாயத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். 

இவர் அடிக்கடி பெரிய நாயக்கன் பாளையம் ஒன்றிய அலுவலகத்துக்கு பொருட்களை ஏற்றி செல்வது வழக்கம். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 10&ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியுடன் சுதாகரனுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 2 வருடங் களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். 

கடந்த மாதம் 8&ந் தேதி மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற சுதாகரன் மாணவியிடம் திருமண ஆசை காட்டி அவரை கற்பழித்தார். இதேபோல் 9&ந் தேதியும் அங்கு சென்று மாணவியிடம் ஜாலியாக இருந்தார்.

இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி வீட்டில் இருந்த மாணவி திடீரென மாய மானார். இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் தேடினர். அப்போது அவர்களது செல்போனுக்கு தொடர்பு கொண்ட சுதாகரன் உங்கள் மகள் என்னோடு தான் உள்ளார். எனவே அவரை தேட வேண்டாம் என கூறி செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். 

இது குறித்து மாணவியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை மீட்ட னர். அவரை திருமண ஆசை காட்டி கற்பழித்த சுதாகரனை கைது செய்தனர். 

பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சுதாகரனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com