கோவை உக்கடம் பழ மார்க்கெட்டில் பலாப்பழ விற்பனை மும்முரம்

மாம்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பலாப்பழம், திராட்சை, சாத்துக்குளி உள்பட பல்வேறு வகையான பழங்கள் விற்பனையாகி வருகிறது.
தேவையான பலாப்பழங்களை தேர்ந்தெடுத்து வாங்கி செல்கின்றனர்.
தேவையான பலாப்பழங்களை தேர்ந்தெடுத்து வாங்கி செல்கின்றனர்.
Published on

கோவை:

கோவை உக்கடம் பகுதியில் பழ மார்க்கெட் உள்ளது. இங்கு மாம்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பலாப்பழம், திராட்சை, சாத்துக்குளி உள்பட பல்வேறு வகையான பழங்கள் விற்பனையாகி வருகிறது.  

இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவிலான பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. 

தற்போது கேரளாவில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பெருந்தல் மண்ணா, மலப்புரம், சாலக்குடி மற்றும் தமிழகத்தில் கடலூர் மாவட்டம் பண்ரூட்டியில் இருந்து கோவை உக்கடம் பழ மார்க்கெட்டிற்கு அதிகளவிலான பலாப்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

உக்கடம் பழ மார்க்கெட்டில் வியாபாரிகள் தங்கள் கடைகளின் முன்பு பலாப்பழங்களை குவித்து வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து வரும் பலாப்பழங்கள் ஒரு கிலோ ரூ.20 என்ற விலையிலும், பண்ரூட்டி பலாப்பழம் கிலோ ரூ.30க்கும் விற்பனையாகிறது. அந்த வகையில் ஒரு பழம் 4 முதல் 5 கிலோ வரை இருக்கிறது. ஒரு பழம் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது.

மார்க்கெட்டில் பழங்கள் வாங்க கூட்டம் கூடுகிறது. அவர்கள் தங்களுக்கு தேவையான பலாப்பழங்களை தேர்ந்தெடுத்து வாங்கி செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com