பொள்ளாச்சி அருகே புதர் மண்டி காணப்படும் அங்கன்வாடி மையம்

புதர் மண்டிய அங்கன்வாடி மையத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அங்கன்வாடி மையம்
அங்கன்வாடி மையம்
Published on

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அடுத்த நஞ்சேகவுண்டன்புதூரில் செயல்படும் தற்காலிக அங்கன்வாடி மைய கட்டிடத்தை சுற்றி புதர்கள் முளைத்து பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து  அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

 பொள்ளாச்சி அடுத்த நஞ்சேகவுண்டன்புதூரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. கடந்த சில வருடங்களாகவே இந்த அங்கன்வாடி மையம் புதர் மண்டி முட்புதர்களாகவும் காணப்பட்டது. இதையடுத்து அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.

அங்கு படித்த 25-க்கும் அதிகமான மாணவர்கள் வேறு ஒரு ஓட்டுக்கூரையால் ஆன கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர்.  ஆனால் அந்த கட்டிடம் போதுமான பாதுகாப்பு இல்லாத வகையில் உள்ளது. கட்டிடத்தை சுற்றி புதர் வளர்ந்து காணப்படுகிறது. 

இதனால், குழந்தைகளை பெற்றோர்கள் அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப மறுக்கின்றனர். ஆகவே குழந்தைகளின் நலன் கருதி அங்கு வளர்ந்துள்ள புதர்களை அப்புறப்படுத்தவேண்டும். மேலும், புதிய அங்கன்வாடி மையம் விரைவில் அமைக்கவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com