ஆழியாரில் இருந்து குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆழியார் அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு சென்றால் பொள்ளாச்சி நகராட்சிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ெபாள்ளாச்சி:

பொள்ளாச்சி நகராட்சி கவுன்சில் கூட்டம் செவ்வா ய்க்கிழமை நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

 நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஆணை யாளர் தாணுமூர்த்தி, அதிகாரிகள் மற்றும் நகர மன்ற கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக 152 தீர்மா னங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தி ன்போது, நகரப்பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள், சாக்கடை தூர்வாருதல், சுகாதார சீர்கேடு, தெரு விளக்கு போன்ற பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் முறையிட்டனர். மேலும், ஆழியார் அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு சென்றால் பொள்ளாச்சி நகராட்சிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.

எனவே, இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம், நகராட்சி பகுதிக்கு வரும் குடிநீரில் பாலாற்று நீர் கலப்பதால் சுவை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 

எனவே, நேரடியாக ஆழியாரில் இருந்து குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 

நகர்மன்ற கவுன்சில ர்களின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகராட்சியில் குடிநீர் சுவை மாறுபடுவது தொடர்பாக நிரந்தர தீர்வு காண, ஆழியாறு அணையில் இருந்து நேரடியாக தண்ணீர் எடுத்து பொள்ளாச்சிக்கு குடிநீர் வினியோகம் செய்வது குறித்து கோரிக்கை முன்மொழிவு தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com