கோவையில் குடிபோதையில் இன்ஸ்பெக்டரின் ஜீப் கண்ணாடியை உடைத்த கூலித் தொழிலாளி

போதையில் இன்ஸ்பெக்டரின் ஜீப் கண்ணாடியை உடைத்த தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கோவை:

கோவை சரவணம்பட்டி சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(24). கூலி தொழிலாளி. நேற்று இவர் வெளியே சென்று அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினார். பின்னர் அளவுக்கு அதிகமான போதையில் நிலைதடுமாறிய படி வீட்டிற்கு சென்றார்.

 அவர் போதையில் இருப்பதை பார்த்த தாய் வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறினார் .இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் தனது தாய் மீது புகார் அளிப்பதற்காக சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு இவர் போதையில் இருப்பதை பார்த்த போலீசார் தற்போது வீட்டிற்கு செல் காலையில் வந்து புகார் கொடுக்கும்படி கூறினார்.

போதையில் வெளியே சென்றார் சுப்பிரமணியன் திடீரென ஆத்திரம் அடைந்து அங்கு இருந்த பூந்தொட்டி எடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரின் ஜீப் கண்ணாடியை உடைத்தார். இதனையடுத்து சரவணம்பட்டி போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com