ஒண்டிப்புதூரில் காவலாளி வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

பின்னர் அவரது மனைவியும்,தாயாரும் வீட்டை பூட்டிவிட்டு உக்கடத்திற்கு சென்றனர். மதியம் அனைவரும் வீட்டிற்கு திரும்பினர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கோவை:

கோவை ஒண்டிபுதூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர்  கருப்பசாமி (48). இவர் தனியார் ஆஸ்பத்திரி காவலாளி. 

நேற்று வழக்கம் போல அவர் வேலைக்கு சென்றார். பின்னர் அவரது மனைவியும்,தாயாரும் வீட்டை பூட்டிவிட்டு உக்கடத்திற்கு சென்றனர். மதியம் அனைவரும் வீட்டிற்கு திரும்பினர்.  

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கருப்புசாமி சிங்காநல்லூர் போலீசல் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்து சென்ற திருடர்களை தேடி வருகின்றனர்.

கோவை செல்வபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சத்யபாமா (வயது 65). இவர் சம்பவத்தன்று ஐ.யு.டி.பி காலனியில் இருந்து உக்கடத்திற்கு பஸ்சில் சென்றார். அப்போது பஸ் ராஜவீதி வந்தபோது சத்தியபாமா அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகை காணாமல் போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

உடனே பஸ் முழுவதும் அவர் தேடிப் பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து சத்யபாமா வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com