கோவை காரமடையில் இருந்து லடாக்கிற்கு 9-ம் வகுப்பு மாணவர் சைக்கிள் பயணம்

நாட்டின் மீது கொண்ட பற்றால், எனது சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
9-ம் வகுப்பு மாணவர் சைக்கிள் பயணம்
9-ம் வகுப்பு மாணவர் சைக்கிள் பயணம்
Published on

கோவை:

காரமடையை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன்   ரித்திக் ராகவ்(வயது14). 9-ம் வகுப்பு மாணவர். இவர் வாழ்க ராணுவம், வளர்க விவசாயம் என்பதை வலியுறுத்தி, காரமடையில் இருந்து, பல்வேறு மாநிலங்கள் வழியாக, இந்திய நாட்டின் எல்லையான லடாக் வரை, சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

காரமடை அரங்கநாதர் கோவில் முன்பு தொடங்கிய இவரது பயணம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் வழியாக லடாக் எல்லையை அடைந்தார். அப்போது, அவருடன் உதவிக்காக உறவினர் ஒருவரும் ஜீப்பில் சென்றார். 

விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட ரித்திக் ராகவ் லடாக் எல்லையை அடைந்து விட்டதாக அவரது தந்தை கண்ணன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், நாட்டின் மீது கொண்ட பற்றால், எனது சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.பயணத்தில் பொதுமக்களிடையே விவசாயம் செழிக்க வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இந்திய ராணுவத்தை பெருமைப்படுத்த வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com