கோவையில் நடந்த விபத்தில் 2 பேர் பலி

கோவையில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கோவை, 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 51). 

 கட்டிட தொழிலாளி. இவர் கோவை சூலூரில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் சேலம்- பாலக்காடு ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஆறுமுகம் மீது ேமாதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலாண்டிபாளையம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் மோகன் (60). சம்பவத்தன்று இவர் இடையர்பாளையம்- வ.உ.சி. நகர் கட் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மோகன் பரிதாபமாக இறந்தார்.

 இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com