கோவையில் தடை செய்யப்பட்ட 1 டன் குட்கா பறிமுதல்

தமிழகத்தில் சமீபகாலமாக கஞ்சா, போதை ஊசிகள், போதை மருந்துகள் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கோவை,  

தமிழகத்தில் சமீபகாலமாக  கஞ்சா, போதை ஊசிகள், போதை மருந்துகள் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதனை தடுக்க தமிழகம் முழுவதும் டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் ஆபரேஷன் 2.0 என்ற பெயரில் கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி கோவை மாவட்டத்தில் தொடர்ந்து குட்கா மற்றும் கஞ்சா பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோரை போலீசார் கைது செய்து வருகின்றனர். 

இந்நிலையில் உக்கடம் லாரிபேட்டை அருகே அதிகாலை உக்கடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாரி பேட்டைக்கு வந்த மினி லாரி ஒன்றை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

 அப்போது அதில் மூட்டை மூட்டைகளாக 1 டன் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார்   குட்காவை பறிமுதல் செய்து மினி லாரியில் வந்த கரும்பு கடையை சேர்ந்த ஆஷிக் (25), மொய்தீன் (28) மற்றும் காரமடையை சேர்ந்த தேவேந்திரன் (50) ஆகிய 3 பேரை ைகது விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில் வடமாநிலத்தில் இருந்து கோவையில் சில்லரை விற்பனைக்காக குட்கா பொருட்கள் எடுத்து வந்தது தெரியவந்தது. மேலும் இந்த குட்கா பொருட்கள் யாருக்காக எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com