போடி அருகே மின்னல் தாக்கி பற்றி எரிந்த தென்னை மரம்

நேற்று மாலை இப்பகுதியில் திடீரென மின்னல் தாக்கி தென்னைமரம் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிய தொடங்கியதுமின்னல் தாக்கியதில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் டி.வி, மோட்டார், பேன் உள்பட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடிமின்ன லுடன் மழை பெய்து வருகிறது. மேலும் அவ்வ ப்போது சூறைக்காற்றும் வீசி வருகிறது. சங்க ராபுரம் பகுதியில் அங்காளஈஸ்வரி கோவில் அருகே தென்னை மரங்கள்உ ள்ளது.

நேற்று மாலை இப்பகுதியில் திடீரென மின்னல் தாக்கியது. இதில் தென்னைமரம் தீப்பற்றி கொளு ந்துவிட்டு எரிய தொடங்கியது. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் தீயை அணைக்க முயன்ற னர். ஆனால் முடியாததால் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் விரைந்து வந்து சுமார் 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். மேலும் மின்னல் தாக்கியதில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் டி.வி, மோட்டார், பேன் உள்பட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com