search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்காய் எண்ணையை நியாய விலை கடைகளில் வழங்க தென்னை விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தென்னை விவசாயிகள்.

    தேங்காய் எண்ணையை நியாய விலை கடைகளில் வழங்க தென்னை விவசாயிகள் வலியுறுத்தல்

    • மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
    • கொப்பரை தேங்காய் வருடம் முழுவதும் கொள்முதல் செய்து தேங்காய் அதிகம் விளையும் ஊர்களில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அப்போது தேங்காய் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் தேங்காய் எண்ணெய் நியாய விலை கடைகளில் வழங்க வேண்டும். மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். மாநில அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தென்னை சார்ந்த தொழில் பூங்கா அமைத்து தர வேண்டும். தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும்.

    கொப்பரை தேங்காய் வருடம் முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும் தேங்காய் அதிகம் விளையும் ஊர்களில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தேங்காய் நார் தொழிற்சாலைகளை பாதுகாக்க வேண்டும். மதிப்புக் கூட்டப்பட்ட தேங்காய் பொருட்களின் ஏற்றுமதிக்கு உதவி செய்ய வேண்டும். தென்னங்கன்றுக்களுக்கு பராமரிப்பு மானியம் வழங்க வேண்டும்‌ என 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, தென்னை விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×