என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.
முதல்-அமைச்சர் 8-ந்தேதி வருகை: நெல்லை மருத்துவக்கல்லூரி மைதானம் தயார் செய்யும் பணி விரைவில் தொடக்கம்
- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
- நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் விழாவை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நெல்லை:
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
நெல்லை வருகை
அதன்படி வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) அவர் நெல்லைக்கு வருகிறார். அவரது வருகையையொட்டி மாவட்ட நிர்வாகம் நலத்திட்ட உதவிகள் பெறுபவர்கள் விபரங்களை தயார் செய்து வருகிறது.
அடிக்கல் நாட்ட வேண்டிய திட்டங்கள், கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தல் உள்ளிட்ட திட்ட பணிகளின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவ கல்லூரி மைதானம்
நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மைதானத்தில் விழாவை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தை மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தி.மு.க. மாவட்ட செயலாளர்களும் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உற்சாகம்
மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் முதல்-அமைச்சர் வருகை குறித்த முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு விழா நடைபெறும் மைதானத்தை சமன்படுத்தி, மருத்துவக்கல்லூரியை சுற்றிலும் சுகாதார பணிகளை விரைந்து மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் விழாவுக்கு வருபவர்களுக்கு சுத்தமான குடிநீர், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பார்க்கிங் செய்யும் வசதி உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் உற்சாகம் அடைந்துள்ளனர்.