search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார் - கோவில்பட்டியில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
    X

    கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய காட்சி.

    தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார் - கோவில்பட்டியில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

    • கோவில்பட்டியில் தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • இது பெரியார், அண்ணா, கருணாநிதியை பெற்ற மண். சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல் அதன் கொள்கைகளை மைக் பிடித்து பேசுகிறார்கள்

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான கருணாநிதி தலைமை தாங்கினார்.

    இதில் தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஒரு பொய்யை தொடர்ந்து கூறினால் உண்மையாகி விடும் என்ற கோயபல்ஸ் தத்துவம் போன்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசி வரு கிறார். அண்ணமாலை அரசியலுக்கு வந்து ஒராண்டு தான் ஆகிறது. நான் அப்படி இருந்தேன், இப்படி இருந்தேன் என சுய புராணம் பாடி வருகிறார்.

    நான் அரசியலுக்கு வந்து 26 ஆண்டுகள் கடந்து விட்டது. இன்றும் ஒரே கொள்கை பிடிப்போடு இருக்கிறேன்.எதிலும் தி.மு.க.வினர் துணிந்து நிற்போம். அண்ணா மலையின் பேச்சைக்கேட்டு யாரும் ஏமாற மாட்டார்கள். இது பெரியார், அண்ணா, கருணாநிதியை பெற்ற மண். சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல் அதன் கொள்கைகளை மைக் பிடித்து பேசுகிறார்கள். சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை திராவிட இயக்கம் தான் மாற்றியது. பெண்களுக்கு கல்வி கிடையாது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு கல்வி கிடையாது. கோவி லுக்குள் செல்ல அனுமதி கிடையாது என்ற நிலையை மாற்றி அமைத்தது நீதிகட்சியும், தி.மு.க.வும் தான் என்பதை மறந்து விடக்கூடாது.

    சாதி, மத பிரச்சினையை உருவாக்கி தமிழகத்தில் பிளவினை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். நிச்சயமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து வாக்குறுதிகளையும் படிப்ப டியாக நிறைவேற்றி வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    Next Story
    ×