ஆலங்குளம் அருகே சி.ஐ.டி.யு. பீடி தொழிலாளர்கள் கிளை கூட்டம்

பீடித்தொழி லாளர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக போனஸ் வழங்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை பி.எப். ஆக செலுத்த வேண்டும்.
ஆலங்குளம் அருகே சி.ஐ.டி.யு. பீடி தொழிலாளர்கள் கிளை கூட்டம்
Published on

நெல்லை:

தென்காசி மாவட்ட பீடி தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் மகாவிஷ்ணு தலைமையில் கிளை அமைப்பு கூட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் நடை பெற்றது. பீடித்தொழி லாளர்க ளுக்கு இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பாக கடந்த 2022-2023-ம் ஆண்டுக்கான போனஸ், விடுமுறை சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை பி.எப். ஆக செலுத்த வேண்டும். வாரந்தோறும் சனிக்கிழமை பீடி சுற்றியதற்கான சம்பளம் வழங்க தனியார் பீடி கம்பெனி நிர்வாகத்தை வலிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் மருதம்புத்தூர் கிளை தலைவர் ராமகிருஷ்ணன், துணை தலைவர்கள் சந்திரா, சரஸ்வதி, செயலாளர் தனலெட்சுமி, துணை செயலாளர்கள் கவிதா, நாராயண லெட்சுமி, பொருளாளர் கிருஷ்ண நவமணி, சம்மேளனக்குழு உறுப்பினர் வள்ளிமயில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com