நாலுமாவடியில் 2 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டது.விருந்தில் நாலுமாவடி சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் உணவு பரிமாறிய காட்சி.
கிறிஸ்துமஸ் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் உணவு பரிமாறிய காட்சி.
Published on

குரும்பூர்:

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் சுற்று வட்டார கிராமத்திலுள்ள 2 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டது.

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் மூலம் தேவனுடைய கூடாரத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாலுமாவடி சுற்று வட்டார கிராம மக்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்குவது வழக்கம். அதேபோல் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்றும் கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தலைமை தாங்கி விருந்து வழங்கும் நிகழ்ச்சி யை தொடங்கி வைத்தார்.

இதில் நாலுமாவடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வகுமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com