search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
    X

    குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

    • குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமைகள், குழந்தை திருமணம் உள்ளிட்டவைகளை தடுப்பது எப்படி?

    மதுக்கூர்:

    மதுக்கூர் சிவக்கொல்லையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு பற்றிய கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அமுதா துரை.செந்தில் தலைமை வகித்தார்.

    மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர்/ வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ராஜூ, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செல்வேந்திரன் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமைகள், கொத்தடிமை தொழிலாளர், குழந்தை திருமணம் உள்ளிட்டவைகளை தடுப்பது எப்படி? என்று அலுவலர்கள் விளக்கமளித்தனர்.

    மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் தீமையை தடுப்பது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வும் நடைபெற்றது. முடிவில் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னப்பா நன்றி கூறினார்.

    இதில் அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதி, சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×