கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு

கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். 1½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றார்.
கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு
Published on

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பனிக்கம்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் அபிராமி (வயது 18). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கல்லூரிக்கு சென்று விட்டு தனது மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். மொபட் கோட்டையாம்பட்டி - பனிக்கம்பட்டி ரோட்டில் சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் கண்இமைக்கும் நேரத்தில் அபிராமி கழுத்தில் அணிந்து இருந்த 1½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றார். இது குறித்து அவர் மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியிடம் செயினை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com