சுவாமிமலை கோவிலுக்கு செல்போன் எடுத்து செல்ல தடை

புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை கொண்டு செல்ல தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.தெற்கு கோபுர வாசலில் உள்ள கைப்பேசி பாதுகாப்பு பெட்டகத்தில் கட்டணம் செலுத்தி ஒப்படைக்க வேண்டும்.
சுவாமிமலை கோவிலுக்கு செல்போன் எடுத்து செல்ல தடை
Published on

சுவாமிமலை:

சுவாமிமலை சுவாமி நாதசாமி கோவில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவிலு க்கு வரும் பக்தா்கள் கைப்பேசி, புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை கொண்டு செல்ல தடைவி தித்து உத்தர விட்டுள்ளது.

இந்த உத்தரவு நாளை (திங்க ட்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.எனவே, கோவிலுக்கு வரும் பக்தா்கள் கைப்பேசி கொண்டு வருவதை தவிா்க்க வேண்டும்.

மேலும், கொண்டு வருபவா்கள் தங்களது கைப்பேசி மற்றும் புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை கோவிலின் தெற்கு கோபுர வாசலில் உள்ள கைப்பேசி பாதுகாப்பு பெட்டகத்தில் கட்டணம் செலுத்தி ஒப்படைத்து விட்டு தரிசனம் முடிந்து செல்லும் போது பெற்றுக்கொள்ளவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com