வந்தே பாரத் ரெயிலில் செல்போன் வெடித்து வடமாநில வாலிபர் படுகாயம்

செல்போன் வெடித்து வடமாநில வாலிபர் படுகாயம்.ரெயில் 35 நிமிடம் கால தாமதமாக புறப்பட்டு சென்றது.
வந்தே பாரத் ரெயிலில் செல்போன் வெடித்து வடமாநில வாலிபர் படுகாயம்
Published on

ஜோலார்பேட்டை:

சென்னை-மைசூரு செல்லும் வந்தே பாரத் ரெயில் இன்று காலை 8 மணி அளவில் வாணியம்பாடி அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது ரெயிலில் பயணம் செய்த வட மாநிலத்தைச் சேர்ந்த குஷ்நாத்கர் (வயது 31) என்பவர், தனது செல்போனை சார்ஜ் போட்டபடி பயன்படுத்தி வந்தார். திடீரென செல்போன் சூடாகி, பயங்கர சதத்துடன் வெடித்து சிதறியது. இதில் படுகாயம் அடைந்த வடமாநில வாலிபர் வலி தாங்க முடியாமல் அலறி கூச்சலிட்டார்.

செல்போன் வெடித்த போது புகை கிளம்பியதால் அந்த பெட்டியில் பயணம் செய்த சக பயணிகள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டதால், ரெயில் பாதியில் நிறுத்தப்பட்டது.

தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று, 2 ரெயில் பெட்டிகளின் பிரதான கதவுகளைத் திறந்து புகையை அகற்றினர்.

இதன்பிறகு ரெயில் 35 நிமிடம் கால தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com