ஜாதி பெயரை சொல்லி பெண் பயணியை திட்டிய அரசு பஸ் கண்டக்டர் மீது வழக்கு

செட்டித்தாங்கல் பஸ் நிறுத்தத்தில் நின்று, அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்ஸில் ஏறி இருக்கிறார்.அரசு பஸ் கண்டக்டர் முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜாதி பெயரை சொல்லி பெண் பயணியை திட்டிய அரசு பஸ் கண்டக்டர் மீது வழக்கு
Published on

கள்ளக்குறிச்சி:

திருக்கோவிலூர் அருகே உள்ள பழைய வேங்கூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீராசாமி மனைவி ஆனந்தநாயகி (வயது 50). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி செட்டித்தாங்கல் பஸ் நிறுத்தத்தில் நின்று, அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்ஸில் ஏறி இருக்கிறார்.

அப்போது பஸ்ஸில் கண்டக்டராக பணிபுரிந்த விளந்தை கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் ஆனந்தநாயகியை பார்த்து ஓசியில் பஸ் ஏற வந்துட்டியா, பஸ்சை விட்டு கீழே இறங்கு என அசிங்கமாக பேசியதோடு ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து ஆனந்தநாயகி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் அரசு பஸ் கண்டக்டர் முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com