search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.50 லட்சம் கடன் பெற்று தருதாக கலெக்டர் ஆபீசுக்கு வரவழைத்து வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி- கேமிரா பதிவை வைத்து விசாரணை
    X

    ரூ.50 லட்சம் கடன் பெற்று தருதாக கலெக்டர் ஆபீசுக்கு வரவழைத்து வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி- கேமிரா பதிவை வைத்து விசாரணை

    • நுழைவு வாயிலில் உள்ள கேமிராவில் அந்த நபர் உருவம் பதிவானது தெரியவந்தது.
    • சம்பவம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 32), கோழிப்பண்ணை வைத்துள்ளார். இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.5 லட்சம் கடன் கேட்டார். ஆனால் கடன் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் அவரது செல்போனுக்கு பேசிய நபர் சேலம் 5 ரோட்டில் இருந்து பேசுவதாகவும், இங்குள்ள பைனான்சில் 50 லட்சம் வரை கடன் பெற்று தருவதாகவும் கூறினார். மேலும் 50 லட்சம் கடனுக்கு 3 லட்சம் ரூபாய் பத்திரம் ஆவணங்கள் வழங்க வேண்டும், சேலம் கலெக்டர் அலுலலகத்தில் உள்ள கருவூலத்தில் அதற்கான பணத்தை செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

    இதனை உண்மை என நம்பிய கதிரேசன் 3 லட்சம் பணத்துடன் சேலம் கலெக்டர் அலுலவலகத்திற்கு வந்தார். பணத்தை வாங்கி கொண்டு கருவூலத்திற்கு சென்ற அந்த நபர் திரும்பி வரவில்லை. நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த கதிரேசன் இது குறித்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து போலீசார் அங்குள்ள கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நுழைவு வாயிலில் உள்ள கேமிராவில் அந்த நபர் உருவம் பதிவானது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×