நாசரேத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை - போலீசார் விசாரணை

2 நாட்களுக்கு முன்பு சுமதி பிரபா வீட்டை பூட்டிவிட்டு பாளையங்கோட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். பீரோ உடைக்கபட்டு அதில் இருந்த நகை பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது. அதன் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.
நாசரேத்தில் வீட்டின் பூட்டை உடைத்து  நகை-பணம் கொள்ளை - போலீசார் விசாரணை
Published on

நாசரேத்:

நாசரேத் குயின் தெருவை சேர்ந்தவர் டேவிட்சன். இவரது மனைவி சுமதி பிரபா (வயது50). கணவர் இறந்துவிட்டதால் மகளுடன் வசித்து வருகிறார்.

நகை-பணம் கொள்ளை

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுமதி பிரபா வீட்டை பூட்டிவிட்டு பாளையங்கோட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். பின்னர் மீண்டும் அவர் நாசரேத் சென்றார்.

அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கபட்டு அதில் இருந்த நகை பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது. அதன் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.

போலீசார் விசாரணை

இது தொடர்பாக அவர் நாசரேத் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பட்டாணி, சப்-இன்ஸ்பெக்டர் ராய்சன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com