search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிடப்பில் போடப்பட்ட பணி சேறும் சகதியுமாக மாறிய புல்லாவெளி-சோலைக்காடு சாலை
    X

    சேறும் சகதியுமாக மாறிய சாலையில் வழுக்கி விழுந்த வாகன ஓட்டியை படத்தில் காணலாம்.

    கிடப்பில் போடப்பட்ட பணி சேறும் சகதியுமாக மாறிய புல்லாவெளி-சோலைக்காடு சாலை

    • மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விழுந்து காயங்களுடன் செல்கின்றனர்.
    • சாலை சேறும் சகதியுமாக உள்ள தால் கூலி தொழிலாளிகள் வேலைக்கு செல்வதற்கு தயங்குகின்றனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளியில் இருந்து சோலைக்காடு வரையிலான மலைப்பாதை யில் தார் சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது புல்லா வெளி-சோலைக்காடு இடையே தார் சாலை அமைக்கப்பட்டு ள்ளது.

    ஆனால் புல்லாவெளியில் இருந்து அரை கி.மீ. தூரத்துக்கு தார் சாலை இன்னும் அமைக்கப்பட வில்லை. தார் சாலை அமைக்காமல் மண் மட்டும் போடப்பட்டுள்ளது. இப்பகு தியில் சில தினங்களாக மழை பெய்து வருவதால் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறியது.

    இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரம ப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விழுந்து காயங்களுடன் செல்கின்றனர். தற்போது சோலைக்காடு, புலையன் வளைவு, நேர்மலை, கூட்டுக்காடு போன்ற பகுதிகளில் மிளகு சீசன் தொடங்கியுள்ளது. சாலை சேறும் சகதியுமாக உள்ள தால் கூலி தொழிலாளிகள் வேலைக்கு செல்வதற்கு தயங்குகின்றனர்.

    மேலும் இந்த சாலையில் சில இடங்களில் இன்னும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்து டன் சென்று வருகின்றனர். சாலையோரம் 200 அடி அபாய பள்ள த்தாக்கு உள்ளது. எனவே மலை ப்பாதை யில் தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×