search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சியில்  நூதன முறையில் பிறந்த நாளை கொண்டாடிய சகோதரர்கள்:   சமூக வலைதளங்களில்  பரவி வருகிறது
    X

    டாய்லட் வடிவில் கேக் உள்ளதை படத்தில் காணலாம்.

    செஞ்சியில் நூதன முறையில் பிறந்த நாளை கொண்டாடிய சகோதரர்கள்: சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

    • கேக்கை வெட்டி சாப்பிட வைத்து நூதன முறையில் பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார்.
    • புதிய சிந்தனையில் உருவாக்கும் நோக்கில் இதுபோன்று செய்ததாக தெரிகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலை எல்.டி பேங்க் தெருவை சேர்ந்தவர் சபீர், இவரது சகோதரர் ஷாகீர் (17).இவர் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 30-ந் தேதி ஷாகீர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அண்ணன் சபீர் இந்தியன் (டாய்லெட்) கழிவறை வடிவத்தில் 5 கிலோ கேக் ஆர்டர் செய்து அதை அவரது தம்பி பிறந்தநாள் அன்று அவருக்கு ஆச்சரியமூட்டும் வகையில் கேக்கை வெட்டி சாப்பிட வைத்து நூதன முறையில் பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார்.

    இந்தியன் டாய்லெட் முறையில் கேக் வாங்கி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் சற்று அருவருப்பாக இருந்தாலும் சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையில் புதிய சிந்தனையில் உருவாக்கும் நோக்கில் இதுபோன்று செய்ததாக தெரிகிறது. இந்த பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    Next Story
    ×