தஞ்சையில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் கொடுத்தவர்கள் செந்தமிழ் செல்வனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். வாழ்க்கையில் விரக்தி அடைந்த செந்தமிழ் செல்வன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சையில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் கூட்டுறவு காலனி பாலாஜி நகரை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் (வயது39). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் செந்தமிழ் செல்வன் சில இடங்களில் கடனுக்கு பணம் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் கடனை திருப்பி செலுத்தவில்லை.

இதனால் கடன் கொடுத்தவர்கள் செந்தமிழ் செல்வனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதன் காரணமாக அவர் கடனை திருப்பி செலுத்த முடியவில்லையே என மன வேதனையில் இருந்தார்.வாழ்க்கையில் விரக்தி அடைந்த செந்தமிழ் செல்வன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செந்தமிழ் செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com