கொடைக்கானலில் பூத்த பிரம்ம கமலம் மலர்

கொடைக்கானலில் -பூத்த அபூர்வ பிரம்ம கமலம் பூவை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
அபூர்வமாக பூத்த பிரம்ம கமலம் பூ.
அபூர்வமாக பூத்த பிரம்ம கமலம் பூ.
Published on

கொடைக்கானல்:

பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பார்ப்பது மிகவும் அரிதானது. அந்த பூவின் நடுவில் பார்த்தால் பிரம்மா படுத்திருப்பது போலவும், அதன் மேல் நாகம் படையெடுத்திருப்பது போலவும் காணப்படும்.

இந்த பூ மிகவும் வாசனையுடன் இருக்கும். ஆனால் விரைவில் வாடிவிடும். பூ பூக்கும்பொழுது நாம் நினைத்ததை வேண்டினால் உறுதியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.

தென் அமெரிக்கா மெக்சிகோ காடுகளில் இருந்து உலகம் எங்கும் பரவியது. இலங்கையில் சொர்க்கத்தின் பூ என்று அழைக்கப்படுகிறது. புத்தருக்கு அஞ்சலி செலுத்த பக்தர்கள் இந்த பூவை பயன்படுத்துகின்றனர்.

கொடைக்கானலில் உள்ள ஒரு வீட்டில் இரவு பிரம்ம கமலம் பூ பூத்தது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வணங்கிச் சென்றனர். வழக்கமாக ஆடிமாதத்தில் பூக்கும் பிரம்ம கமலம் தற்போது பூத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் குறைகளை நீக்க பூவை தொட்டு வணங்கினர். இந்த பிரம்ம கமலம் பூச்செடி வெட்டப்படும் போது அதிலிருந்து மற்றொரு செடியின் துண்டிலிருந்து வளரும் இதன் இலைகள் தட்டை யாகவும், தடிமனாகவும் இருக்கும். தண்டுப்பகுதி எப்போதும் இலைகளால் சுற்றப்பட்டிருக்கும்.

கொடைக்கானல் குளிர் பிரதேசம் என்பதால் இங்கு வளர்ந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். உலக நன்மை வேண்டியும், அமைதிக்காகவும் நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம் மலரை பொதுமக்கள் வேண்டி வணங்கினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com