தருமபுரியில் பட்டாசு வெடித்து சிறுவன் காயம்

சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். சிறுவனுக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
தருமபுரியில் பட்டாசு வெடித்து சிறுவன் காயம்
Published on

தருமபுரி:

தருமபுரி அருகே நடுப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் ரித்திக் (வயது15). இந்த சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

நேற்று வீட்டின் அருகே வெடிக்காமல் கிடந்த ஒரு பட்டாசை எடுத்துள்ளார். அதனை தீ வைத்து பற்ற வைத்துள்ளார். அப்போது சரியாக வெடிக்கவில்லை என்று தவறாக நினைத்து பட்டாசை சிறுவன் கையில் எடுத்தபோது திடீரென்று வெடித்தது.

இதில் சிறுவனுக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து மதிகோண்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com