களக்காட்டில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் களக்காடு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் இரட்டைமலை சீனிவாசனின் உருவபடத்தை திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் நெல்சன் தலைமை தாங்கினார்.
இரட்டைமலை சீனிவாசன் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்ட காட்சி. 
இரட்டைமலை சீனிவாசன் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்ட காட்சி. 
Published on

களக்காடு:

களக்காட்டில் திவான்பகதூர் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் நெல்சன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முகமது காஸிர், மாவட்ட இளைஞரணி செயலாளர் அர்ஜுன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் களக்காடு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் இரட்டைமலை சீனிவாசனின் உருவபடத்தை திறந்து வைத்தார்.

இதில் தொழிலபதிபர் சுபாஷ், புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் மாவட்ட மகளிரணி செயலாளர் ரேணுகா, களக்காடு ஒன்றிய செயலாளர் இன்பரசு, ராதாபுரம் ஒன்றிய செயலாளர் மிக்கேல்ராஜ், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் சரத்குமார், களக்காடு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருகானந்த், களக்காடு ஒன்றிய மகளிரணி செயலாளர் கனகராணி, வள்ளியூர் ஒன்றிய மகளிரணி செயலாளர் வேலம்மாள், ராதாபுரம் மகளிரணி செயலாளர் முருகானந்தம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆனந்த சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். களக்காடு நகரச் செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com