என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்துறைப்பூண்டியில், புதிய பஸ் நிலையம் அமைக்க பூமிபூஜை
    X

    திருத்துறைப்பூண்டியில் பஸ் நிலையம் அமைக்க பூமிபூஜை நடந்தது.

    திருத்துறைப்பூண்டியில், புதிய பஸ் நிலையம் அமைக்க பூமிபூஜை

    • பஸ் நிலையம் கட்டுமான பணிக்கான பூமிபூஜை நடந்தது.
    • நிகழ்ச்சியில் மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என மாரிமுத்து எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

    பின், புதிய பஸ் நிலையம் கட்ட ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கட்டுமான பணிக்கான பூமிபூஜை நடந்தது. நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் ஜெயப்பிரகாஷ், ஆணையர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு, அலுவலக ஊழியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பேரிடர் ஆலோசனை குழு உறுப்பினர் செல்வகணபதி, பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், அனைத்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×