பெள்ளாதி ஊராட்சியில் ரூ.45.60 லட்சத்தில் வளர்ச்சி பணிக்கு பூமி பூஜை

விழாவுக்கு பெள்ளாதி ஊராட்சி தலைவர் பூபதி என்ற குமரேசன் தலைமை வகித்தார்.
பெள்ளாதி ஊராட்சியில்  ரூ.45.60 லட்சத்தில் வளர்ச்சி பணிக்கு பூமி பூஜை
Published on

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட ஏழுஎருமை பள்ளத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ். ரூ.45.60 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்ட பூமி பூஜை போடப்பட்டது. இதற்கு பெள்ளாதி ஊராட்சி தலைவர் பூபதி என்ற குமரேசன் தலைமை வகித்தார். ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக பங்கே ற்றார். காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் சாமிநாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com